பள்ளி மாணவர்களுக்கு மடிக்கனிணி      தமிழ்நாடு பல்வேறு வீடுகளின் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உள் நாட்டிலுள்ள  தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கும் தங்கள் நிறுவனங்களை தொடங்கிட  வாய்ப்பாக அமைந்து வருகிறது. இது தமிழக இளஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஒரு புதிய அத்தியாத்தை ஏற்படுத்தியுள்ளது இவ்வேலை வாய்ப்புகளை பெறும் அளவில் தமிழகத்தின் அடிதட்டு நிலையிருக்கும் குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையிலும் அவர்கள் இந்த புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் அளவில் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கப்பட்டு புதிய சூழ்நிலைக்கேற்ற திறனைாளிகளாக உருவாக்கப்பட வேண்டியுள்ளது. அவ்வாறு அடித்தட்டு குடும்பத்திலுள்ள மாணவர்களின் திறனை தற்போதய கணிணி மயத்திற்கு இணையாக கொண்டு வரவும், அவர்களின் திறனை மேலும் மேம்படுத்தவும் , மனித வள  மேம்பாட்டை உலகலாவிய வளர்ச்சிக்கு ஈடு கட்டும் வகையில் சிறந்த சமூக பொருளாதார நோக்கத்துடனும், மாண்புமிகு தமிழக முதல்வா் அவர்களால் மாணவர்களுக்கு இலவசமடிக்கணிணி வழங்கும் திட்டம் அறிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களும், கலை மற்றம் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், பொறியியல் கல்லூாரிகள் மற்றம் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் பயனடைவார்கள் எனவே அரசாணை எண் 1 சிறப்பு திட்ட செயலாக்க துறை நாள்03.06.2011மூலம் அரசு மற்றும் அரசு நிதியுதிவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணிணி வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

 

            இத்திட்டத்திற்கு தேவைப்படும் மடிக்கணிணிகளை வாங்கி வழங்கும் பொறுப்பை தமிழ்நாடு மின்பொருட்கள் கழகத்திற்கு (எல்காட்) வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் மடிக்கணிணிகளின் தரத்தை நிர்ணயம் செய்து ஒப்பந்தபுள்ளிகள் மூலம் பெற்று வழங்கும் பொறுப்பையும் இக்கழகத்திடமே வழங்கப்பட்டுள்ளது. தேர்விடப்பட்ட நிறுவனங்கள் வட்டவாரியாக பணிமனைகள் ஏற்படுத்தி செயல்படாத மடிக்கணிணி  பழுது நீக்கம் செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து எல்காட் நிறுவனம் சுற்றறிக்கை மூலம் அறிவிப்பு வெளியிட்டு மடிக்கணிணி நிறுவனங்கள் தங்களின் பணிமனைகள் மூலம் செய்து தரக்கூடிய காலாந்திர பழுது நீக்கம் மற்றும் காலந்திர பணிகள் குறித்த காலகுறியீட்டுகளையும் கட்டுபாடுகளை தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

             இத்திட்டம் 2011 செப்டம்பர் 15ம் நாள் முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திடத்தின் மூலம் பயன்பெறும் அரசு மற்றும் அரசு நிதியுதிவி பெறும் மேனிலைப்பள்ளி மாணவர்கள், கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், பொறியியல் மற்றும் பாலிடெனிக் கல்லூாகளில் பயிலும் மாணவர்கள் கீழ்கண்டவாறு தகுதிகளையுடையவர்களாக இருக்க வேண்டும்,

 

  


வருடம்

மேல்நிலை
பள்ளிகள்

 கலைஃஅறிவியல்
கல்லூாரிகள்

பொறியியல்
கல்லூரிகள்

தொழில்நுட்ப
கல்லுாரிகள்

2011-2012

மேல்நிலை
(இரண்டாம்
ஆண்டு

1.ம் (ம)3ம்ஆண்டு மாணவர்கள்

2.ம் (ம)4ம்ஆண்டு மாணவர்கள்

 1.ம் (ம)3ம்ஆண்டு மாணவர்கள்

2012-2013

மேல்நிலை
(இரண்டாம்
ஆண்டு

3ம்ஆண்டு மாணவர்கள்

2.ம் (ம)4ம்ஆண்டு மாணவர்கள்

 1.ம் (ம)3ம்ஆண்டு மாணவர்கள்

2013-2014

மேல்நிலை
(இரண்டாம்
ஆண்டு

-

-

 1.ம்  ஆண்டு மாணவர்கள்

  

நடப்பு நிதியாண்டில் (2011 - 2012ல்) மேனிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முன்றாம் ஆண்டு பயிலும் அறிவியில் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் பயன்பெறுவார்கள்.


மடிக்கணிணி

 


வ.எண்

சட்டமன்றதொகுதி
பெயர்

வட்டத்தின் பெயர்

பெறப்பட்ட
எண்ணிக்கை

மாணவர்களுக்கு
வழங்கப்பட்டவை

இருப்பு

1.

திருவைகுண்டம்

திருவைகுண்டம்

86

86
 அரசு மேல் நிலைபள்ளி சிறுத்தொடண்டநல்லூர்

  -

2.

தூத்துக்குடி

தூத்துக்குடி

14

14
சி.வ.அரசு மேல்நிலை
பள்ளி தூத்துக்குடி

-


அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி