முத்தாரம்மன் கோவில் திருவிழா
இத்திருத்தலம் கன்னியாகுமாரி - திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. முத்தாரம்மன் கோவில் திருச்செந்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமாரியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் உள்ளது. குலசேகரபட்டிணத்தில் சிறப்பு மிக்க முத்தாரம்மன் கோவில் வங்காளவிரிகுடா கடற்கரையின் அருகாமையில் அமைந்துள்ளது. இது ஏறக்குறைய 150 வருடங்கள் பழமையானது. இங்க ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தசராப் பண்டிகை கொண்டாப்படுகிறது. கிராமிய கலைகள் மற்றும் தெய்வ அவதாரங்களின் உருவங்கள் வேடம் அணிந்து பக்தா்கள் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்து அம்மன் அருள் பெற்று செல்கின்றனர்.

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி