திருச்செந்தூர் வைகாசி விவசாகம்


 

Vishakam

 

வைகாசிவிசாகத் திருவிழா முருகக் கடவுள் அவதரிதலையும் அதன் பின் அசுரனின் தலைவன் சூரபத்மனை அழித்து புவியைகாப்பதையும் தெரிவித்தும் விழாவாக திகழ்கிறது. இத்திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலும் (சுவாமிமலையிலும்) கொண்டாடப்படுகிறது வள்ளி திருமணம் வைகாசி விசாக திருவிழாவில் நடைபெறுகிறது. முருகன் பூலோகத்தில் அவதரித்த அசுரன் சூரபத்மனின் கொடுமைகளிலிருந்து தேவர்களை காபி்பாற்றியதை வைகாசி விழாவாக விசாக நட்சத்திர நாளான்று முருகனாக அவதரித்ததையே இது ஆகும் முருகனாக அவதரித்த முருக கடவுளுக்கு கந்தா, கார்த்திகேயா(அ) முருகா என்ற பெயர்களும் உண்டு (27 நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று) (அ) முருகன் என்ற பெயர்களும் உண்டு (27 நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று)

 

விசாக நட்சத்திரத்தின் முக்கியத்துவம்

 

விசாக நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் மிகச் சிறந்த நட்சத்திரமாகும் துறவிகளும் அறிஞர்களும் பௌத்த மதத்தை தோற்றிவித்த புத்தர் இதே நட்சத்திரத்தில் தான் பிறந்தார்கள். இதே நட்சத்திரத்தில் முருக கடவுள் அவதரித்துள்ளார் அதனாலேயே ஞானத்தில் சிறந்த அவரை ஞானபண்டிதன” என்றழைக்கிறோம். வானவியில் சாஸ்திரபடி கார்த்திகை மற்றும் விசாக நட்சத்திரங்கள் முறையே 3வது மற்றும் 16வது நட்சத்திரங்களாக வான மண்டலத்தில் உள்ளன. சமஸ்கிரகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒளிமயமான ஞானத்தையும் ஒழுக்க நெறிமுறைகளையும் அமைய பெற்றதையே இது குறிப்பிடுகிறது. உண்மையான நெறிமுறைகளுடன் வாழ்க்கை முறையை உள்ளடக்கியாதகும்.

 

ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாக திருவிழாற்கு மாவட்ட ஆட்சித்தலைவரால் உள்ளுர்விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அமைப்பு வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி
ஆக்கம் தேசிய தகவலியல் மையம், தூத்துக்குடி