மூடு

சமூகநலத்துறை

அலுவலக முகவரி
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தூத்துக்குடி.
அலுவலக தொலைபேசி எண்:0461 2325606.

மாவட்ட சமூகநலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள்:

திருமண உதவித்திட்டங்கள் :

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்:

ஏழை விதவை தாய்மார்கள் மகளின் திருமணத்தை நடத்திட நிதியுதவி வழங்குதல் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு திருமணத்திற்கு முன்னர் 40 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000/- ஆகும். கல்வித்தகுதி நிர்ணயம் இல்லை. பட்டம் பயன்றவர்களுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.50,000/- நிதிஉதவியும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்றவர்களுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கமும் மற்றும் ரூ.25,000/- நிதிஉதவியும் வழங்கப்படுகிறது.

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதிஉதவித் திட்டம்:

ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு நிதிஉதவி வழங்குதல் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு திருமணத்திற்கு முன்னர் 40 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தாய் தந்தை இறப்புச்சான்று வழங்க வேண்டும் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஆதரவற்றோர் சான்று பெற்று வழங்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு மற்றும் வயது உச்சவரம்பு ஏதுமில்லை. கல்வித்தகுதி நிர்ணயம் இல்லை.  பட்டம் மற்றும் பட்டயம் பயன்றவர்களுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.50,000/- நிதிஉதவியும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்றவர்களுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.25,000/- நிதிஉதவியும் வழங்கப்படுகிறது.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதிஉதவி திட்டம்:

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணநிதி உதவித் திட்டத்தின் கீழ் விதவைகளுக்கு புதுவாழ்வு அமைத்து கொடுப்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு திருமண நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். விதவைசான்று வழங்க வேண்டும் மணமகள் குறைந்த பட்ச வயது 20, மணமகன் குறைந்தபட்ச வயது 40க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் மணமகனுக்கு முதல் திருமண சான்று வட்டாட்சியரிடம் பெற்று இணைக்கப்பட வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. கல்வித்தகுதி நிர்ணயம் இல்லை. பட்டம் மற்றும் பட்டயம் பயன்றவர்களுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.50,000/- (இதில் ரூ.30,000/-காசோலையாகவும் ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்றவர்களுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.25,000/- (இதில் ரூ.15,000/- காசோலையாகவும் ரூ.10,000- தேசிய சேமிப்பு பத்திரம்) நிதிஉதவியும் வழங்கப்படுகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமணநிதி உதவித் திட்டம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிநினைவு கலப்பு திருமணநிதி உதவித் திட்டத்தின் கீழ் சமூதாயத்தில் இனப்பாகுபாட்டை களைந்து சமநிலையை உருவாககுதல் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும.  இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராகவும் மற்றொருவர் பிற இனத்தவரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். அல்லது தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருக்க வேண்டும். திருமணம் முடிந்து 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.
பட்டம் மற்றும் பட்டயம் பயின்றவர்களுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.50,000/- நிதிஉதவியும் இதில் (ரூ.30,000/-காசோலையாகவும் ரூ.20,000/-
தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்ற பயனாளிகளுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.25,000/- நிதிஉதவியும் (இதில் ரூ.15,000/- காசோலையாகவும் ரூ.10,000- தேசிய சேமிப்பு பத்திரம்) வழங்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழக முதல்வரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

பெண் சிசுக்கொலையைத் தடுத்து பெண் கல்வியை ஊக்கப்படுத்துதல் போன்ற பெண்குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற திட்டம்-I-ல்:  01.08.2011 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து குடும்பத்தில் ஒரு பெண்குழந்தை மட்டும் இருப்பின் அக்குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத்தொகையாக ரூ.50,000/- முதலீடு செய்யப்படுகிறது.

திட்டம் -2-ன் : கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் தலா 25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இத்திட்டங்களில் விண்ணப்பிக்க 35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல் வேண்டும் குடும்பத்தில் ஆண்குழந்தை இருத்தல் கூடாது. இரண்டு பெண்குழந்தைகள் மட்டும் இருக்க வேண்டும். பெற்றோர்கள் தமிழகத்தில் 10 ஆண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும். இரண்டாவது பெண்குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேணடும்.

தகவல் அறியும் உரிமை சட்டம் பொது தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையட்டு அலுவலர் விபரம்.

கண்காணிப்பாளர்
மாவட்ட சமூகநல அலவலகம்,
தூத்துக்குடி.

மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
தூத்துக்குடி.