மூடு

ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம், ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.

கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதி செய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும்.

உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர், மற்றும் துணை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவலர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர். நகராட்சிகளின் கமிஷனர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர்.

வருவாய்

பிரிவு அ: அலுவலக நடைமுறை, அலுவலர்கள் நிறுவுதல், தபால்கள், ஒழுங்கு நடவடிக்கைகள்,நியமனங்கள்.
பிரிவு பி: ஜமாபந்தி, பாசனம், கையாடல், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்  நிறுவுதல், ஆய்வு மற்றும் சந்திப்புகள் தொடர்பானது.
பிரிவு சி: சினிமா, திரையரங்குகள், ஜெயில், நில ஒழுங்குகள், குற்றவியல் வழக்குகள், துப்பாக்கிகள், கட்டிட உரிமம், படைக்கலச் சட்டம், மாசுக்கட்டுப்பாடு.
பிரிவு டி: நில மாற்றம், நில ஆக்கிரமிப்புகள், நிலம் வகுத்தமைத்தல், நில குத்தகை.
பிரிவு இ: நிலம் கையகப்படுத்துதல், நில வழக்குகள், தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொடர்பானவை.
பிரிவு ஜி: திங்கள் தின கோரிக்கைகள், முதலமைச்சரின் தனிப் பிரிவு, மனுக்கள், முதலமைச்சரின் நிவாரண நிதி, ஏ.ஆர்.எஸ்., டி.ஆர்.எஸ்., ஓ.ஏ.பி., தொடர்பானவை.
பிரிவு ஐ: ஆவணங்கள் காப்பகம், ஆவணங்கள் பராமரிப்பு, நூலகம், வருவாய் கட்டிடங்கள், பிறப்பு மற்றும் இறப்பு, அரசுத் தேர்வுகள், மரங்கள், குறைந்தபட்ச ஊதியம்.
பிரிவு ஜே: இலங்கை அகதிகள், வருவாய் வசூல் சட்டம், தணிக்கை.
பிரிவு கே: சம்பளம், வாகனங்கள், எரிபொருள் ஆகியவை தொடர்பான கணக்கு பிரிவு.
பிரிவு எல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம், வேலை வாய்ப்பு, மிக்ஸி, கிரைண்டர்.
பிரிவு எம்: நிலச் சீர்திருத்தம், பூமிதான நிலங்கள் மற்றும் தொடர்பான வழக்குகள்.
கலால் (ஆயம்): சுங்க வரி சேகரித்தல், எம்.எல்2, எம்.எல்4 உரிமம் தொடர்பான வழக்குகள்.
மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலகம்: ஆதி திராவிடர் நலம், விடுதிகள், கல்வி உதவித்தொகை, சான்று சரிபார்த்தல் தொடர்பானவை.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்: பிற்படுத்தப்பட்டோர் நலம், விடுதிகள், கல்வி உதவித்தொகை தொடர்பானவை.
பேரிடர் மேலாண்மை: இயற்கை இன்னல்கள், தீ, பேரிடர் மேலாண்மை தொடர்பானவை.
மாவட்ட வழங்கல் அலுவலகம்: குடிமைப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பானவை.
ஆர்: வரவேற்பு மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகை.
முத்திரைகள்: இந்திய முத்திரைகள் சட்டம், நில மதிப்பு தொடர்பானவை.
டி.எஸ்.ஆர்: சுனாமி, நிலம் தொடர்பானவை.
அரசு கேபிள் டி.வி. நிறுவனம்: அரசு கேபிள் டி.வி. தொடர்பானவை.
விமான அலுவலகம்: விமான நில எடுப்பு தொடர்பானவை.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் : பஞ்சாயத்துகள் தொடர்பானவை.
சிறுசேமிப்பு அலுவலகம் : சிறுசேமிப்பு மற்றும் தொடர்பான அம்சங்கள்.

பிற துறைகள்

வேளாண்மை துறை: வேளாண்மை மற்றும் தொடர்புடைய அம்சங்கள்.
செய்தி மக்கள் தொடர்புத்துறை: தகவல், பத்திரிக்கை செய்தி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்: குழந்தை வளர்ச்சி தொடர்பானவை.
துணை இயக்குநர் (கனிமம்): நிலவியல் மற்றும் கனிம வளத்துறை.
தாட்கோ: தமிழ்நாடு ஆதி திராவிடர் வீடுகள் மற்றும் வளர்ச்சி தொடர்பானவை.
தமிழ் வளர்ச்சித் துறை: தமிழ் வளர்ச்சி தொடர்பான துறை.
உதவி இயக்குநர் (நில அளவை): நில அளவை தொடர்பான துறை.
புள்ளியியல்: புள்ளியியல் தொடர்பான துறை.