மூடு

டாக்டர் கி. செந்தில் ராஜ், இ.ஆ.ப.,

District Collector
மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ.ஆ.ப அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர். இவர் 2012ஆம் ஆண்டு அணியில் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர். இவர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டத்தினை நிறைவு செய்தார். மாவட்ட ஆட்சியர் பயிற்சியை வேலூரில் நிறைவு செய்த பிறகு திருப்பூரில் சார் ஆட்சியராக 2014 இல் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் சார் ஆட்சியராக 2015 – 2017இல் பணியாற்றினார். இவர் மேலும் திட்ட இயக்குநர் (ம) உறுப்பினர் – செயலராக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சென்னையிலும், இந்திய ஹோமியோபதி மருத்துவத் துறை ஆணையராகவும், 2017-2019இல் பணியாற்றியுள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவராவதற்கு முன் இயக்குநராக தமிழ்நாடு தேசிய சுகாதாரத் திட்டத்தில் 2019-20இல் பணியாற்றியுள்ளார். மருத்துவர். கி. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் 15.11.2020 முற்பகலில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதியாகப் பணியில் சேர்ந்துள்ளார்.