மூடு

வேளாண்மைத் துறை

தலைமை அலுவலகம் / பதவி வேளாண்மை: இணை இயக்குநர்

வேளாண்மை வளாகம்

மாவட்ட ஆட்சியர் காம்பவுண்ட்

தூத்துக்குடி

தொலைபேசி எண்: 0461- 2340678

வ.எண். பெயர் மற்றும் பதவி  வட்டாரங்களின் அலுவலக தொலைபேசி எண் இ-மெயில் கைபேசி எண்
1 திரு.எம்.எஸ்.என். செல்வராஜ்
வேளாண்மை இணை இயக்குநர்
0461-2340678 jdatuti[at]yahoo[dot]com 9442561821
2 திரு.எஸ்.சமுத்திர பாண்டியன்,
வேளாண்மை உதவி இயக்குநர்
04632-222130 adakvp[at]gmail[dot]com 9791248586
3 திரு.எ.மோகன்ராஜ்
வேளாண்மை உதவி இயக்குநர்
0461-2271797 adapudukkottai[at]gmail[dot]com 9443584074
4 திரு.எ.மோகன்ராஜ்
வேளாண்மை உதவி இயக்குநர்(பொ)
0461-2911096 adaottm[at]gmail[dot]com 9443584074
5 திருமதி.எஸ்.சுதாமதி
வேளாண்மை உதவி இயக்குநர்(பொ)
04630-255656 adasrv[at]gmail[dot]com 9486335337
6 திருமதி.டி.தமிழ்மலர்
வேளாண்மை உதவி இயக்குநர்
04639-242424 adaticr[at]gmail[dot]com 9486041521
7 திரு.எம்.பாலசுப்பிரமணியன்
வேளாண்மை உதவி இயக்குநர்
04639-272230 adaalw[at]gmail[dot]com 9442999501
8 திரு.கே.பாலசிங்
வேளாண்மை உதவி இயக்குநர்
04638-234774 adavkm[at]gmail[dot]com 7373725544
9 திரு.கே.முருகப்பன்,
வேளாண்மை உதவி இயக்குநர்
04638-252300 adapdur[at]gmail[dot]com 9488068565
10 திரு.யு.புவண்ணன்
வேளாண்மை உதவி இயக்குநர்
04639-250301 adaudg[at]gmail[dot]com  9443002181
11 திரு.எஸ்.நாகராஜ்
வேளாண்மை உதவி இயக்குநர்
04632-261901 adakyt[at]gmail[dot]com 9940839014
12 திரு.கே.சரவணன்.
வேளாண்மை உதவி இயக்குநர்
04630-263055 adased[at]gmail[dot]com 9442355873
13 திரு.என்.நெடுஞ்செழியன்
வேளாண்மை உதவி இயக்குநர்(பொ)
04639-266113 adasklm[at]gmail[dot]com 7339292944

சராசரி  பயிர் சாகுபடிப் பரப்பு

வ.எண்  பயிர் HA
1 நெல் 14,400
2 சிறுதானியம் 61,800
3 பயறு வகைகள் 66,700
4 பருத்தி 4,500
5 கரும்பு 300
6 எண்ணெய்வித்துக்கள் 3,500
7 வாழை 10,300
8 வெங்காயம் 1,400
9 மிளகாய் 11,750
10 காய்கறி 2,050
11 தென்னை 4,500
மொத்தம் 1,81,200

கூட்டுப் பண்ணயம்

இத்திட்டத்தின் நோக்கமாவது:

 1. அதிக உற்பத்தி திறனை அடையும் பொருட்டு, சிறு / குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, பயிர் பாராமிப்பு மற்றும் குறைந்த உற்பத்திச் செலவுடன், கூடிய , புதிய வேளாண் உத்திகளை சிறு /குறு விவசாயிகளுக்குள் தெளிவு பெறச் செய்தல்
 2. உயர்ந்த லாபமடையும் பொருட்டு சிறு /குறு விவசாயிகளை ஒருங்கினைத்து விவசாயிகள் ஆர்வக்குழு, அதனடிப்படையில் விவசாய விளை பொருள் உற்பத்திக்கும், மற்றும் , விவசாயிகள் உற்பத்தியாளர் கம்பெனி அமைத்தல்
 3. உற்பத்தியாளர்கள் குழு அமைக்கும் பொருட்டு, அவாகளுக்கு தேவையான பண உதவியை மேற்கொள்ளுதல், அவர்களிடையே சமுதாய பங்களிப்பு உருவாக்குதல், மனித வள மேம்பாட்டு அடைதல் விவசாய உற்பத்தியாளர் மையம் அமைக்க உதவுதல்
 4. சிறு /குறு விவசாயிகள் கடன் பெறும் வழிமுறைகளின் தடையை நீக்குதல்
 5. சிறு / குறு விவசாயிகளுக்கு சிறந்ததொறு சூழ்நிலையை உருவாக்கிதந்து ஓட்டு மொத்த உற்பத்திக்கும் அதனைத் தொடர்ந்து உற்பத்தி மற்றும் லாபத்தை மேம்படுத்துதல்
 6. விவசாயத் தொழிலில் சிறு /குறு விவசாயிகளின் ஆர்வத்தை நிலைபெறச் செய்தல்

பயன்பெறும் பயனாளிகள்

தூத்துக்குடி மாவட்ட சிறு/குறு விவசாயிகள் 2017-2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி மவாட்டத்தில், கோவில்பட்டி, கயத்தா, விளாத்திகுளம், புதூர் , ஓட்டப்பிடாரம், வட்டாரங்களில் இத்திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது.

விதை உற்பத்தி மற்றும் விதை விநியோகம்

 • தமிழ்நாடு அரசு விதை மேம்பாட்டு கழகம் (TANSEDA) மூலம் மாவட்டத்தில் தரமான சான்று விதைகளை உற்பத்தி செய்து விதை மாற்று சதவீத இலக்கின்படி சான்று பெற்ற நெல்விதைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்
 • விதை மாற்று சதவீத்த்தின் அடிப்படையில் தேவையான விதை உற்பத்தி செய்து விதை பயன்பாட்டு சங்கிலித் தொடரைப் பெணுதல்
 • விதை விநியோகத்தைக் கண்காணித்தல், உரிய காலத்தில் விவசாயிகளுக்கு தரமான விதைகளைக் கிடைக்கச் செய்தல்
 • இம்மாவட்டத்தில் அதிக அளவு சாகுபடி செய்யப்படும் சதவீதம் அடிப்படையில் அரசு நிர்ணயிக்கும் இலக்கீட்டின்படி விதை விநியோகம் மேற்கொள்ளுதல்
பயன்பெற தொடர்புக்கு  – அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்

இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்பொழுது செயல்படுத்தப்படுகிறது.பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் ( ) நோக்கம் வேளாண்மையில் நிலையான உற்பத்திக்கு பின்வரும் வழி முறைகளால் துணை நிற்பதே ஆகும்.

 1. இயற்கை இடாபாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குதல்
 2. விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்தல்
 3. நவீன வேளாண்மை தொழில் நுட்பங்களை கடைப்பிடிக்க விவசாயிகளை ஊக்குவித்தல்.
 4. விவசாய பெருமக்களை உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பதுடன், உணவு பாதுகாப்பிற்காக விவசாயிகளுக்கு கடன் உதவி தொடர்ந்து கிடைப்பதை உறுதிபடுத்தி வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துதல்

திட்டத்தில் சேர தகுதிபெறும் விவசாயிகள்:

 • அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில், அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகள் அனைவரும் (குத்தகை விவசாயிகள் உட்பட) இத்திட்டத்தில் சேர தகுதியானவாகள்
 • பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளப்படுவர்
 • பயிர் கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம்
பயன்பெற – அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை விவசாயிகள் அணுகலாம்.

மண் வள இயக்க திட்டத்தின் நோக்கம்

 • புவிகோள் இருப்பறி அமைப்பு முறையில் மானாவர்ரி நிலத்தில் 10 ஹெக்டேருக்கு ஒரு கிரிட் மண் மாதிரியும் சேகரித்து ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக மண் வள அட்டை வழங்குதல்
 • மண் வளம் தொடாபான குறைபாடுகளை கண்டறிந்து மண்ணின் பௌதீக தன்மைகள் இரசாயன தன்மைகளின் நிலைபாடுகளை கண்டறிந்து அதிக மகசூலை பெற்றிட வழிவகை செய்தல்
 • மண் ஆய்வின்படி ஒருங்கிணைந்த உரமேலாண்மை வழங்கி மண் வளத்தை அதிகரித்து உற்பத்தி திறனை பெருக்குதல்

நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம்

இத்திட்டம் மானாவாரி வேளாண்மைக்காக 2016-17ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம். மானாவாரி பயிர்களின் உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். தொடர்ச்சியான 1000 எக்டர் மானாவாரி பரப்பை ஒரு தொகுப்பாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தொகுப்பிலும் பெரும் பகுதிக்கு சேவை செய்யும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமே தொடர்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமாகச்(Nodal PACCS) செயல்படும். தொகுப்பு மேம்பாட்டுக் குழு மூலமாக திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் விவசாயிகளை உள்ளடக்கிய மானாவாரி கிராம விவசாயிகள் மேம்பாட்டுக் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு கூட்டுறவு சங்க விதிகளின்படி பதிவு செய்யப்பட வேண்டும்.

 • இத்திட்டத்தின்கீழ் கீழ்க்கண்ட இனங்களுக்கு மானிய உதவி அளிக்கப்படுகிறது
 • கோடை உழவு : எக்டருக்கு ரூ.1250 வீதம்
 • நுழைவு கட்டப்பணி : தடுப்பணை அல்லது கசிவு நீர் குட்டை அமைக்க தொகுப்பிறகு ரூ.5 இலட்சம்
 • நில மேம்பாட்டுப்பணி : நீர் சேமிப்பு அமைப்புகளுக்கு தொகுப்பிற்கு ரூ.7..5 இலட்சம்
 • உழவியல் பணிகள்: விதை, உயிர் உரம், நுண்ணூட்ட உரம் மற்றும் இதர முக்கிய இடுபொருட்களுக்கு 50% மானியம்
 • மதிப்பு கூட்டுதல்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.4 இலட்சம் மற்றும் தொகுப்பிற்கு ரூ. 6 இலட்சம்
 • பொது வாடகை மையங்கள் : ரூ.8 இலட்சத்திற்கு மிகாமல் 80 சதவீத மானியத்தில் இயந்திரங்கள்

கால்நடை பராமரிப்பு:

 1. மாடுகளின் தீவனத்தை மேம்படுத்துதல்
 2. இனபெருக்க சுகாதாரத்தை மேம்படுத்துதல்
 3. மடு சுகாதாரத்தை மேம்படுத்துதல்
2016-17ம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்கண்டவாறு 15 தொகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
3
வட்டாரம் தொகுப்பு பரப்பளவு (எக்டர்)
ஒட்டப்பிடாரம் 3 3000
கருங்குளம் 2 2000
கோவில்பட்டி 3000
கயத்தார் 3 3000
விளாத்திகுளம் 2 2000
புதூர் 2 2000
மொத்தம் 15 15000
2017-18ஆம் ஆண்டிற்கு ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி கயத்தார், விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரங்களில் தலா 6 தொகுப்புகள் வீதம் மொத்தம் 30 தொகுப்புகள் அமைக்கப்பட்டு ஆரம்பக் கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

நிலையான வேளாண்மைக்கு தேசிய இயக்கம்

மானாவாரி பகுதி மேம்பாடு

மானாவாரி வேளாண்மையின் நிலைத் தன்மையினை அடைவதற்கு இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் ஊக்குவிக்கப்படுகிறது. ஒரே பயிரைச் சார்ந்திருக்காமல், பண்ணை வருமானத்தை பெருக்கும் நோக்கத்தில் பயிர் அடிப்படையிலான சாகுபடி திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. பயறு வகைப் பயிரைத் தொடர்ந்து பருத்தி சாகுபடி செய்யும் பயிர் திட்டமே (நமது மாவட்டத்திற்கு) மிகவும் ஏற்ற பயிர் திட்டம். இத்திட்டத்தின் கீழ் ஒரு விவிசாயி ஒரு எக்டர் பரப்பளவிற்கு மட்டுமே பயனடைய முடியும் பயனாளி விவசாயி கறவை மாடு வாங்க 50 சதவீத மானியம் அல்லது ரூ.17500ம், பயிர் திட்டத்திற்கு 50 சதவீத மானியம் அல்லது ரூ.10000ம் ஆக மொத்தம் ஒரு விவசாயிக்கு ரூ.27500 மானியமாக வழங்கப்படும். மண்புழு கழிவு உரம் தயாரிக்கும் நிரந்தர அமைப்புக்கு 50 சதவித அல்லது ரூ.25000ம் HDPE அமைப்புக்கு 50 சதவித அல்லது ரூ.6000ம் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்திற்கு இவ்வாண்டிற்கு ரூ.266.75 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்

இத்திட்டம் சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைப் பயிர்களுக்கு தனித்தனியாக இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ஒரு விவசாயி அதிக பட்சம் 2 எக்டர் பரப்பிற்கு பயனடையலாம்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்: சிறுதானியங்கள்

 1. அ) வீரிய ஒட்டு விதை விநியோகத்திற்கு 50 சதவீத மானியம் மற்றும் முன்னேறிய தொழில் நுட்ப செயல் விளக்கத்திற்கு எக்டருக்கு ரூ.5000 மானியம் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.77 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
 2. ஆ) தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்: பயறு வகைகள்
  உயர் விளைச்சல் இரகம் (HYV) விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2500 மானியமும், முன்னேறிய தொழில் நுட்ப செயல் விளக்கத்திற்கு எக்டருக்கு ரூ.5000ம், பயிர் திட்டம் அடிப்படையிலான செயல் விளக்கத்திற்கு எக்டருக்கு ரூ.10000ம் துவரை வரப்பு பயிருக்கு எக்டருக்கு ரூ.100ம் உயிர் உர விநியோகத்திற்கு எக்டருக்கு ரூ.150ம் பயிர் பாதுகாப்பு மருந்து மற்றும் நுண்ணூட்ட உர விநியோகத்திற்கு எக்டருக்கு ரூ.500ம் விசைத் தெளிப்பான் ஒன்றுக்கு ரூ.3000ம், சுழற் கலப்பை ஒன்றுக்கு ரூ.35000ம், தெளிப்பு நீர் பாசனக் கருவிக்கு எக்டருக்கு ரூ.10000ம், நீர் பாய்ச்சும் குழாய்க்கு எக்டருக்கு &.15000ம் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள தொகை ரூ.387.6 இலட்சம்.

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்:

இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயி இரண்டு எக்டர் பரப்பிற்கு பயனடையலாம்.

 1. அ) நெல் இயக்கம்: உயிர் உரம், ஜிங் சல்பேட், களைக்கொல்லி மற்றும் நுண்ணூட்ட உரம் ஆகியவை 50 சதவீத மானியத்திலும் விசை உழுவை ரூ.75000க்கு மிகாமல் 50 சதவீத மானியத்திலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். திட்டத்திற்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டத் தொகை ரூ.27.67 இலட்சம்.
 2. ஆ) சிறுதானிய இயக்கம்: நுண்ணூட்ட உரம் மற்றும் உயிர் உரம் ஆகியவை 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள தொகை ரூ.23.8 இலட்சம்.
 3. இ) பயறு இயக்கம்: தரமான விதை உற்பத்திக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 விதை நேர்த்தி மருந்துக்கு எக்டருக்கு ரூ.100, வரிசை விதைப்புக்கு எக்டருக்கு ரூ.1000 மற்றும் DAP இலை வழி தெளிப்புக்கு எக்டருக்கு ரூ.650 இத்திட்டத்தின் கீழ் மானியமாக வழங்கப்படுகிறது.
 4. ஈ) எண்ணெய் வித்து இயக்கத்தில் விதை உற்பத்தி மற்றும் சான்று விதை விநியோகம், உயிர் உர விநியோகம் ஆகியவற்றிற்கு 50 சதவீத மானியமும் ஆமணக்கு வரப்பு பயிரிடுவதற்கு உக்டருக்கு ரூ.150ம் மானியமாக அளிக்கப்படுகிறது.
 5. உ) மண்வளம் அதிகரித்தல: பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்து புக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் வளத்தை அதிகரிப்பதே திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர விதைகள் 50சதவீத எக்டருக்கு ரூ.1500க்கு மிகாமல் விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு ரூ.4.46 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
 6. எ) நிலையான கரும்பு சாகுபடி திட்டம்: கரும்பு சாகுபடியை லாபகரமாக்கவும் புதிய தொழில் நுட்பங்களை ஊக்குவிக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்துள்ள கரும்பு விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயனடைய முடியும். இத்திட்டம் இவ்வாண்டு தரணி சர்க்கரை ஆலையுடன் இணைந்து 100 எக்டர் பரப்பில் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.18.75 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட பயானாளிகள் அனைவரும் சொட்டுநீர் பாசன திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

சொட்டுநீர் பாசனம்:

திட்ட வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட விலைகளின்படி மானியம் வழங்கப்படும். BIS முத்திரையிடப்பட்ட தரமான இனங்கள் கருவிகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயனடைய ஆதார் விபரம் அவசியம் ஒரு விவசாயி அதிக பட்சம் 5 எக்டர் பரப்பிற்கு பயனடையலாம். சிறு மற்றும் குறு விவசாயிகள் 100 சதவித மானியமும் பிற விவசாயிகள் 75 சதவீத மானியமும் பெறலாம் சொட்டுநீர் பாசனத்திற்கு 220 எக்டரும் ஆக மொத்தம் 630 எக்டருக்கு ரூ.208.9 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.