முக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்
திருவிழா
முத்தாரம்மன் கோவில் திருவிழா
இத்திருத்தலம் கன்னியாகுமாரி – திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. முத்தாரம்மன் கோவில் திருச்செந்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமாரியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் உள்ளது. குலசேகரபட்டிணத்தில் சிறப்பு மிக்க முத்தாரம்மன் கோவில் வங்காளவிரிகுடா கடற்கரையின் அருகாமையில் அமைந்துள்ளது. இது ஏறக்குறைய 150 வருடங்கள் பழமையானது. இங்க ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தசராப் பண்டிகை கொண்டாப்படுகிறது. கிராமிய கலைகள் மற்றும் தெய்வ அவதாரங்களின் உருவங்கள் வேடம் அணிந்து பக்தா்கள் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்து அம்மன் அருள் பெற்று செல்கின்றனர்.
பனிமயமாதா திருவிழா
தூத்துக்குடி நகின் கடற்கரை ஒரத்தில் அமைந்துள்ள பனிமயமாதா ஆலயம் கிறிஸ்தவர்களின் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களின் ஒன்றாகும்
இவ்வாலயம் கி.பி.1711 போர்ச்சுகீசீயர்களில் நிர்மானிக்கப்பட்டது ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட மாதம் 5ம் தேதி பனிமயமாதா திருவிழா கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூர் சஷ்டி
முருக கடவுளின் பிறப்பையும் அவர் அசுரர் தலைவர் சுரபத்மனை வெற்றி வாகை சுடியதையும் தெரிவிக்கும் இதிகாசகால கதையாகும். முருக கடவுளுக்கு சுப்பவிரமணியன், கார்த்திகேயன், சண்முகன் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டார் அசுரணான சுரபத்மனின் கொடுரம் தேவர்களால் சகித்து கொள்ள முடியாத நிலையில் அவர்கள் தேவலோக தலைவன் இந்திரனோடு சேர்ந்து பிரம்மாவிடம் வேண்டினர். பிரம்மா பலம் வாய்ந்த சுரபத்மனை அழக்கவேண்டுமானால் சிவனிலிருந்து கிளம்பும் ஒளி கற்றைகளால் மட்டுமே முடியும் என்பதால் தேவி பார்வதியையும், காம கடவுளையும் உதவிக்கு அழைத்தனர். தேவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பார்வதி தேவி சிவனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டர்ர். அமைதியான சமாதி நிலையில் இருக்கும் கோரிக்கையோடு தவமிருந்தார், பார்வதியின் கடுந்தவமும் காமணின் தியாக எண்ணமும் சிவனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். அமைதியான சமாதி நிலையில் இருக்கும் சிவபெருமான எழுப்ப காமனும் சிவனை நோக்கி தன்னை அழித்து கொள்ளும் கோரிக்கையோடு தவமிருந்ததார். பார்வதியின் கடுந்தவமும் காமணின் தியாக எண்ணமும் சிவனை சமாதி நிலையிலிருந்து எழுப்பியது. சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பிழப்புகள் கங்கை ஒளிக்குள் விழுந்து 6 குழந்தைகளையும் பராமரித்து வளார்க்க ஆறு கார்த்திகை பெண்களை ஏற்படுத்தினர். ஆறு குழந்தைகளும் பருவ வயதை எய்தியதும், ஆறு குழந்தைகளையும் ஒரு குழந்தையாக சிவன் மாற்றினர். அவரே முருக கடவுள் சுரபத்மனை வெற்றிவாகைச் கூட வந்த வீராராவரர்.
கந்தஷஷ்டி திருவிழா 7 நாட்கள் (அக்டோபர் – நவம்பர்)
இத்திருவிழா தீபாவளிக்கு மறுநாள் வரக்கூடிய அமாவசையை தினத்திலிருந்து தொட்குகிறது 5 லட்சுத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கிறாா்கள் . சுரபத்மனை வெற்றிவாகை கூட முருக்கடவுள் ஆறுநாட்கள் விரதமிருந்ரது. வெற்றிக்கொண்டோ. எனவே ஆறு நாட்கள் பக்தர்கள் விரதமிருந்து ஆறாவது நாள் சுரபத்மன் முருக கடவுளால் போரில் வெற்றி வாகைசுடுகிறார் என்பரும் ஜதீகம் போரில் வென்ற முருகனுக்கு 7வது நாள் தெய்வானையுடன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது ஆண்டுதோறும் நடைபெறும்.
திருச்செந்தூர் வைகாசி விவசாகம்
வைகாசிவிசாகத் திருவிழா முருகக் கடவுள் அவதரிதலையும் அதன் பின் அசுரனின் தலைவன் சூரபத்மனை அழித்து புவியைகாப்பதையும் தெரிவித்தும் விழாவாக திகழ்கிறது. இத்திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலும் (சுவாமிமலையிலும்) கொண்டாடப்படுகிறது வள்ளி திருமணம் வைகாசி விசாக திருவிழாவில் நடைபெறுகிறது. முருகன் பூலோகத்தில் அவதரித்த அசுரன் சூரபத்மனின் கொடுமைகளிலிருந்து தேவர்களை காபி்பாற்றியதை வைகாசி விழாவாக விசாக நட்சத்திர நாளான்று முருகனாக அவதரித்ததையே இது ஆகும் முருகனாக அவதரித்த முருக கடவுளுக்கு கந்தா, கார்த்திகேயா(அ) முருகா என்ற பெயர்களும் உண்டு (27 நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று) (அ) முருகன் என்ற பெயர்களும் உண்டு (27 நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று).
விசாக நட்சத்திரத்தின் முக்கியத்துவம்
விசாக நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் மிகச் சிறந்த நட்சத்திரமாகும் துறவிகளும் அறிஞர்களும் பௌத்த மதத்தை தோற்றிவித்த புத்தர் இதே நட்சத்திரத்தில் தான் பிறந்தார்கள். இதே நட்சத்திரத்தில் முருக கடவுள் அவதரித்துள்ளார் அதனாலேயே ஞானத்தில் சிறந்த அவரை ஞானபண்டிதன” என்றழைக்கிறோம். வானவியில் சாஸ்திரபடி கார்த்திகை மற்றும் விசாக நட்சத்திரங்கள் முறையே 3வது மற்றும் 16வது நட்சத்திரங்களாக வான மண்டலத்தில் உள்ளன. சமஸ்கிரகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒளிமயமான ஞானத்தையும் ஒழுக்க நெறிமுறைகளையும் அமைய பெற்றதையே இது குறிப்பிடுகிறது. உண்மையான நெறிமுறைகளுடன் வாழ்க்கை முறையை உள்ளடக்கியாதகும்.
ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாக திருவிழாற்கு மாவட்ட ஆட்சித்தலைவரால் உள்ளுர்விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
நிகழ்வுகள்
மகாகவி சுப்பிரமணிபாரதியார்
பெயர் | மகாகவி சுப்பிரமணிபாரதியார் |
---|---|
உன்மையான பெயர் | சுப்பையா |
பிறப்பு | 11.12.1882 |
பிறந்தஇடம் | எட்டையாபுரம் தூத்துக்குடி மாவட்டம் |
நாட்டினம் | இந்தியன் |
இதர பெயர்கள் | பாரதியார் , சக்திதாசன் |
பெற்றோர்கள் | சின்னசாமி சுப்பிரமணியஅய்யர் லட்சுமி அம்மாள் |
மனைவி | செல்லம்மாள் |
செல்வாக்கு | பாரதிதாசன் |
அரசியல் | இந்திய விடுதலை போராட்டம் |
அவரைப் பற்றி | 1. அவர் கவிதைகள் 2. விடுதலை போராட்டத்தில் அவரின் பங்கு |
இறப்பு | 11.09.1921 சென்னை |
உமறுபுலவர்
அரபு மொழியிலமைந்த முகமதுநபிநாயகம் அவர்களின் வரலாற்றைத் தமிழில் சுவைபடக் கூறும் நூல்“சீறாப்புரணம். இந்நூலின் ஆசிரியரான உமறுப்புலவர் 1642 ம் வருடம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்திலுள்ள நாகலாபுரத்தில் பிறந்தார் . எட்டையாபுரத்தில் வாழ்ந்தார். தந்தையார் பெயர் செய்யது முகமது அலியார். இவர் எட்டையாபுரபுர அரசவைப் புலவராக விளங்கிய கடிகை முத்து புலவரிடம் கல்வி கற்றார். இவரைவள்ளல் அபுல்காசிம் மரைக்காயர் என்பவர் ஆதரித்தார். இவரது நினைவாக நாகலாபுரத்தில் எழுப்பப்பட்டுள்ள மணிமண்டப்பத்தை நாம் இன்றும் காணலாம். மேலும் இவரது பெயரால் உமறுப்புலவர் தொழிற் பயிற்சி மையம் ஒன்று தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இக்கிராமம் தூத்துக்குடியிலிருந்து 62 கி.மீ தொலைவில் உள்ளது.தற்போது தமிழக அரசினால் அமுதகவி உமறுப்புலவருக்கு எட்டையாபுரத்தில் மணிமண்டபம் உருவாக்கப்பட்டள்ளது.
இம்மணி மண்டபத்தில் தரைதளத்தில் வழிபாட்டு அறையாகவும் மேல்தளத்தில் நூலகமும் அமையப் பெற்றுள்ளது.
இம்மணி மண்டபம் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையினால் பராமாரிக்கப்பட்டு வருகிறது.
வ.உ.சி.சிதம்பரநார்
பெயர் | வ.உ.சிதம்பரம்பிள்ளை |
---|---|
பிறப்பு | 05.09.1872 வண்டானம் ஒட்டப்பிடாரம் அருகில் தூத்துக்குடிமாவட்டம் |
சிறப்பு பெயர்கள் | வ.உ.சி. கப்பல் ஒட்டிய தமிழன் |
நிறுவனம் | இந்திய தேசிய காங்கிரஸ் சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் |
அரசியல் | இந்திய சுதந்திர போராட்டம் |
தொழில் | வழக்கறிஞர் |
இறப்பு | 18.11.1936 |
வீமராஜா ஐகவீர பாண்டிய கட்டபொம்மன்
முழுபெயர் | வீமராஜா ஐகவீர பாண்டிய கட்டபொம்மன் |
---|---|
பிறந்த இடம் | பாஞ்சாலகுறிச்சி, ஒட்டப்பிடாரம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் |
தந்தை பெயர் | ஜகவீர பாண்டிய கட்டபொம்மன் |
தாயார் | ஆறுமுகத்தம்மாள் |
சகோதர்கள் | 1. தளவாய் குமாரசாமி.(செவத்தையா ராஜா) 2. துரைசிங்கம் (ஊமத்துரை ராஜா) |
பிறந்த தேதி | 03.01.1760 |
வணங்கிய கடவுள் | 1. சக்கம்மா 2. திருச்செந்தூர் முருகன் |
ஆண்ட காலம் | 02.02.1790 முதல் 16.10.1799 முடிய |
இறப்பு | 16.10.1799 |
இறந்த இடம் | கயத்தார், தூத்துக்குடி மாவட்டம் |