மாவட்டம் பற்றி
தூத்துக்குடி மாவட்டம் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் இந்நேரம் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. கி.பி.7ம் நூற்றாண்டு (ம) 9ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னின் அரசியல் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது. இந்நகரம் கி.பி9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை சோழ மன்னின் அரசாட்சியின் கீழ் இருந்தது. முதலாவதாக தூத்துக்குடிக்கு கிபி1932ல் போர்ச்சுக்கீசியர்களும் அதனை தொடர்ந்து கி.பி1658ல் டச்சி நாட்டவரும் வந்தனர். கி.பி 1782ல் டச்சு நாட்டவரும் வந்தனர். கி.பி 1782ல்டச்சி நாட்டவிடமிருந்து தூத்துக்குடி நகரத்தினை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி கிழக்கு இந்திய கம்பெணியினை நிறுவினார்கள்.
20ம் நூண்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காகவும்ஆங்கிலேயின் கொடுமைக்கு எதிராகவும் போராடி தங்களது உடல் உயர் உடமை அனைத்தையும் இழந்த உன்னத தலைவர்களாகிய வீரபாண்டியகட்டப்பொம்மன்,மகாகவிபாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்கள். வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் முதல் முதலாக கி.பி.1907ம் ஆண்டு சூன் 1ம்தேதி எஸ்.எஸ்.காலியா என்ற சுதேசி கப்பலை வெற்றிகரமாக இயக்கினார்.