மூடு

பாஞ்சாலங்குறிச்சி

வழிகாட்டுதல்

பாஞ்சாலங்குறிச்சி கிராமம் தூத்துக்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் திருநெல்வேலியிருந்து 55 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிறிய ஊராகும். இவ்வூரில் பிறந்த மக்களால் போற்றப்பட்ட வீரபாண்டியக்கட்டபொம்மன் கி.பி. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசை எதிர்த்து குரல் எழுப்பினார். வீரப்பாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவுச் சின்னம் 1974ல் தமிழக அரசால் கட்டப்பட்டது. நினைவுச்சின்னம் கட்டிடத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வீர தீரங்களையும் அவர்கால வரலாற்று சான்றுகளையும் வெளிப்படுத்தும் முகமாய் அமைந்துள்ளன. கோட்டைக்குள் ஸ்ரீதேவி சக்கம்மாள் கோவில் அமைந்துள்ளது. கோட்டையின் அருகே போரில் மரணம் அடைந்த ஆங்கிலேய போர் விரர்களை புதைக்கப்பட்ட இடம் உள்ளது. ஆங்கிலேயர்களால் அனுமதிக்கப்பட்ட பழைய கோட்டையின் எஞ்சியப் பகுதிகளை தொல்லியில் துறையினரால் பராமரிக்கப்பட்டது. இவ்விடத்திற்கு சென்று வர தூத்துக்குடியிலிருந்து நகர பேருந்து வசதிகள் உள்ளன.

புகைப்பட தொகுப்பு

  • கட்டபொம்மன் சிலை
  • பாஞ்சாலங்குறிச்சி

அடைவது எப்படி:

வான் வழியாக

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கி.மீ தூரம்

தொடர்வண்டி வழியாக

தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 25 கி.மீ தூரமை்

சாலை வழியாக

தூத்துக்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் திருநெல்வேலியிருந்து 55 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.