மூடு

கருவூலம்

அலுவலகம்:மாவட்ட கருவூல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தூத்துக்குடி-628101.
தொலைபேசி எண்: 0461-2324400
நிகரி: 0461-2324402
மின்னஞ்சல்: dtotut[dot]tndta[at]nic[dot]in

கருவூலதோற்றம்

தமிழ்நாட்டில் வருவாய்த்துறையின் ஓர் அங்கமாககருவூலம் செயல்பட்டுவந்தது. 01.11.1954ல் சென்னைநகரில் சம்பளக்கணக்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. அந்த சம்பளக் கணக்கு அலுவலகம் கருவூலப் பணிகளுடன் தணிக்கைப் பணிகளையும் இணைத்து செயல்பட்டு வந்தது. சென்னை அரசாங்கத்தின் நிதித்துறையின் நேரடிநிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கியது. 01.04.1962ல் கருவூலம் மற்றும் கணக்கு துறை என தனித்துறை உருவாக்கப்பட்டது.

இயக்குனரகம்:

சென்னையில் கருவூலகணக்கு இயக்குனரகம் செயல்பட்டுவருகிறது. துறைத்தலைமை இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார். தற்போதைய முதன்மைசெயலர்-திரு.தென்காசி.சு.ஜவஹர்,இ.ஆ.ப.,ஆவார்.

 1. மண்டல இணை இயக்குநர்அலுவலகங்கள்
 2. சம்பளம் மற்றும் கணக்குஅலுவலகங்கள்
 3. ஓய்வுதியம் வழங்கும் அலுவலகம்
 4. சார்சம்பளக் கணக்குஅலுவலகங்கள்
 5. முத்திரைத்தாள் உதவிகண்காணிப்பாளர்அலுவலகம்,சென்னை
 6. மாவட்டகருவூலங்கள்
 7. சார்கருவூலஅலுவலகங்கள்
 8. ஓய்வுதிய இயக்குநர்அலுவலகம்(நிர்வாககட்டுப்பாடுமட்டும்)

ஆகிய அலுவலகங்கள் இயங்குகின்றன. சம்பளகணக்கு அலுவலகங்கள்,கருவுலங்கள் மேற்கொள்ளும் முதன்மைபணிகள் அரசுநிர்வாகத்தின் அன்றாட வரவு செலவுகளே. எனவே இந்ததுறை அரசின் ஒரு முக்கியமான துறையாகும்.

முக்கியப்பணிகள்:

 1. அரசுஊழியர், ஆசிரியர் சம்பளப்பட்டியல்கள்,பயணப்படி பட்டியல்கள் மற்றும் இதரநிர்வாகம் பட்டியல்கள் கூர்ந்தாய்வு செய்து அங்கீகரித்தல் தற்பொழுது சம்பளப்பட்டியல்கள் வலைதளப் பட்டியல் முறையில் ஏற்பளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறது.
 2. அரசு அலுவலகங்களின் திட்டம் மற்றும் திட்டமில்லா செலவுப்பட்டியல்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறது.
 3. ஓய்வுதியர்களுக்கு மாதாந்திர ஓய்வுதியம் வழங்குதல் மற்றும் அதுதொடர்பான பணிகள் தற்பொழுது மின்ஓய்வுதிய முறையில் சிறப்பாக வழங்கப்படுகிறது.
 4. முத்திரைத்தாள் மற்றும் வில்லைகள் விற்பனை கருவுலங்கள் மூலமே விற்பனையாளர்களுக்கு விற்க அனுமதிக்கப்படுகிறது.
 5. தலநிதி வைப்புத்தொகை கணக்குகள், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற வைப்புத்தொகை,பிணை வைப்புத்தொகை,வருவாய் வைப்புத்தொகை ஆகியவை கருவுலங்கள் மூலமே பராமரிக்கப்படுகின்றன.
 6. இதர அரசு அலுவலகங்களின் மாற்று திறவுகோல் மற்றும் மதிப்புள்ள சேமபாதுகாப்பு பொருட்களை கருவுல சேமகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
 7. அரசின் அன்றாட வரவுசெலவு கணக்குகளை தொகுப்பு செய்யும் உள்ளீடுகள் பணி முக்கியமான கருவூலப்பணியாகும்.
 8. மாவட்டம் ழுழுவதும் நடைபெறும் அரசின் அன்றாட வரவுசெலவுகளை மாதாந்திர கணக்காக துறைவாரியாக தொகுப்பு செய்யப்பட்டு மாநில கணக்காயருக்கு மாதந்தோறும் முறையாக அனுப்பப்படுகிறது.
 9. “அ”பிரிவு அலுவலர்களுக்கு சம்பளச் சீட்டுமற்றும் முன்ஊதியச் சான்றிதழ் வழங்கல்.
 10. பணம் பெறும் அலுவலர்களுக்கு குறியடு எண் அளித்தல்
 11. ஆண்டு நிதி ஒதுக்கீடு காலாண்டுகளுக்கு பகிர்வு செய்து அவை மிகா வண்ணம் செலவு செய்யப்படுகிறதா என்பதனை கண்காணித்தல்.
 12. பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தில் விடுபட்ட பதிவுகளை பணம் பெறும் அலுவலர்கள் மூலம் சரிசெய்தல்.