மூடு

காணத்தக்க இடங்கள்

அய்யனார் சுணை

அய்யனார் சுணை கோயில்

அய்யனர் சுணை திருச்செந்தூரிலிருந்து 4 கி.மீ.தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் ஊற்றி பெருகும் இயற்கையான நீருற்று இதன் அருகில் ஒரு அய்யனார் கோவில் உள்ளது மனற்குனக்றுகள் மற்றும் காடுகள் சூழ்ந்த இந்த இடம் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது

எட்டையாபுரம்

எட்டையாபுரம் கோட்டை

புரட்சி கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த ஊர் எட்டையாபுரம் ஆகும். இது திருநெல்வேலியிலிருந்து 76 கி.மீட்டரிலும் கோவில்பட்டியிலிருந்து 35 கி.மீட்டரிலும் அமைந்துள்ளது. அவர் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக அரசால் மாற்றப்பட்டுள்ளது. தமிழ் புலவரான உமறுபுலவரின் தான்ஷா இவ்வூரில் அமைந்துள்ளது.

கழுகுமலை வைணவ கோவில்

கழுகுமலை சமண கோவில்

கழுகுமலை வையணவ கோவில் திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் கோவில்பட்டியிலிருந்து 21 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வைணவகோவிலான இக்கோவில் ஆதிநாதன்நேமிநாத மகாவீர பர்வநாதர், பாகுபலி ஆகியோரின் சிலைகள் உள்ளன . இங்கே பிரதித்தி பெற்ற வெட்டுவான் கோவிலும் உள்ளது. பாண்டிய மன்ர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இக்கோவில் இப்போதும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கிறது.

குலசேகரபட்டிணம்

குலசேகரபட்டிணம் கோயில்

இத்திருத்தலம் கன்னியாகுமாரி – திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. முத்தாரம்மன் கோவில் திருச்செந்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமாரியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் உள்ளது. குலசேகரபட்டிணத்தில் சிறப்பு மிக்க முத்தாரம்மன் கோவில் வங்காளவிரிகுடா கடற்கரையின் அருகாமையில் அமைந்துள்ளது. இது ஏறக்குறைய 150 வருடங்கள் பழமையானது. இங்க ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தசராப் பண்டிகை கொண்டாப்படுகிறது. கிராமிய கலைகள் மற்றும் தெய்வ அவதாரங்களின் உருவங்கள் வேடம் அணிந்து பக்தா்கள் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்து அம்மன் அருள் பெற்று செல்கின்றனர்.

பனிமயமாதா ஆலயம்

பனிமயமாதா ஆலயத் தோற்றம்

தூத்துக்குடி நகரின் கடற்கரை ஒரத்தில் அமைந்துள்ள பணிமயமாதா ஆலயம் கிறிஸ்தவர்களின் பிரசித்தப் பெற்ற வழிப்பாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயம் கி.பி. 1711 போர்த்துகிசியர்காளால் நிர்மாணிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பனிமயமாதா திருவிழா கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூர் அகலாய்வு

திருச்செந்தூர் திருநெல்வேலி நெடுங்சாலையில் திருநெல்வேலி 25.கி.மீ தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது பழங்காலங்களில் இறந்தவர்களை மண்பானையில் புதைக்கும் வழக்கம் இருந்தது. இங்கு அகல்வாராய்ச்சின் மூலம் மண் பாண்ட தாழி மற்றும் பழங்காலத்தில் உபயோகப்படுத்திய பாத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த இடம் தற்போது தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்சி துறையின் கட்டுபாட்டில் உள்ளது.

காயல்பட்டிணம்

காயல்பட்டிணம் கடற்கரை

காயல்பட்டிணம் கொற்கைக்கு அடுத்தாற்போல் பிரசித்திபெற்ற துறைமுகமாக கி.பி 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் செயல்பட்டது. இது தூத்துக்குடி யிலிருந்து 30கி.மீ தொலைவிலும் திருச்செந்தூரலிருந்து 18 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது வங்காளவிாிகுடாவில் அமைந்துள்ள சிறந்த கடற்கரை ஒன்றாகும்.

கயத்தார்

கயத்தார் மண்டபம்

கயத்தார் திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 25 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயேரை எதிர்த்து முதலில் குரல் கொடுத்த சுதந்திர போராட்ட வீரா் வீர பாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயேர் இவ்விடத்தில் தூக்கிலிட்டனர். வீரம் செறிந்த இச்சுதந்திர போராட்ட வீரரின் நினைவு சின்னம் அவரை தூக்கிலிடப்பட்ட இடத்திலேயே தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

கொற்கை பழைய துறைமுகம்

கொற்கை துறைமுகம்

சங்க காலத்தில் பாண்டிய மன்னர்கள் ஆட்சியிலிருந்து கொற்கை துறைமுகம் செயல்பட்டு வந்துள்ளது.தூத்தக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது.திருச்செந்தூரிலிருந்து 29 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இத்துறைமுக பகுதியில் கொற்கை குளம் 250 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பழங்கால பிரசித்துபெற்ற வெற்றிவேலம்மன் கோவில் இப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

மணப்பாடு

மணப்பாடு தேவாலயம்

இத்திருத்தலம் திருச்செந்தூரிலிருந்து 18 கி.மி. தொலைவிலும் திருநெல்வேலியிருந்து 70 கி.மி. தொலைவிலும் உள்ள மணப்பாடு என்னும் கிராமத்தில் திருச்சிலுவை ஆலயம் அமையப்பட்டுள்ளது.

மெஞ்ஞனபுரம்

மெஞ்ஞனபுரம் தேவாலயம்

திருச்செந்தூரிலிருந்து 13 கி.மி. தொலைவில் அமைந்துள்ள இக்கிராமம் ஒரு பழமையான கிராமம் ஆகும். 1847 ஆம் ஆண்டு தூய பொலின் ஆலயம் இவ்வூரில் கட்டப்பட்டுள்ளது. இது 110 அடி நிலத்திலும் 55 அடி அகலத்தில் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் முகப்பில் 192 அடி உயரத்தில் வானளாவிய கோபுரம் அமைந்துள்ளது. இத்திருத்தலம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாலயங்களில் மிக உயரமான கோபுரத்துடன் கூடிய பெரிய தேவாலயமாகும்.

நவகைலாயம்

நவகைலாய திருத்தலங்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது.
பாபநாசம் (சூரியன்)
நவகைலாய திருத்தலத்தில் முதலாவதாக பாபநாசம் இருக்கின்றது. இது திருநெல்வேலியிலிருந்து மேற்கே 45கிமீ ல் பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசராதர் அம்பாள் உலகாம்பிகை நடைதிறப்பு காலை 6.00 – 1.00 மாலை 4.30 – 8.00
சேரன்மகாதேவி (சந்திரன்)
இந்திருத்தலம் பாபநாசத்திலிருந்து கிழக்கே 22கிமீ ல் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் ஆவுடைநாயகி நடைதிறப்பு காலை 7.00 – 9.00 மாலை 5.00 – 7.00
கோடகநல்லூர் (செவ்வாய்)
இக்கோவில் சேரன்மாகதேவியிலிருந்து திருநெல்வேலி சாலையில் 15கிமீ ல் கல்லூர்க்கு அருகில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் சிவகாமி நடைதிறப்பு காலை 6.00 – 12.00 மாலை 5.00 – 6.30
குன்னத்தூர் (ராகு)
இக்கோவில் திருநெல்வேலி டவுணிலிருந்து 4கிமீ ல் அமைந்துள்ளது. இக்கோவிலிருந்து 2கிமீ ல் திருவேங்கிடநாதபுரம் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் சிவகாமி நடைதிறப்பு காலை 7.300 – 11.00 மாலை 5.00 – 6.30
முறப்பநாடு (குரு)
இக்கோவில் திருநெல்வேலிலிருந்து தூத்துக்குடிக்கு செல்லும் சாலையில் 13கிமீல் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் சிவகாமி நடைதிறப்பு காலை 7.00 – 10.00 மாலை 5.00 – 7.00
திருவைகுண்டம் (சனி)
இக்கோவில் முறப்பநாடு கோவிலிருந்து கிழக்கே 20கிமீ ல் அமைந்துள்ளது. இங்கு நவதிருப்பதி தலங்களில் முதல் திருத்தலம் அமைந்தள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் சிவகாமி நடைதிறப்பு காலை 7.00 – 10.30 மாலை 5.00 – 8.30
தென்திருப்பேரை (புதன்)
இக்கோவில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் திருவைகுண்டத்திலிருந்து 8வது கிமீ ல் அமைந்துள்ளது இங்கு நவதிருப்பதி திருத்தலத்தின் 7வது திருத்தலம் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் அழகிய பொன்னம்மை நடைதிறப்பு காலை 7.00 – 10.30 மாலை 5.00 – 8.30
இராஜபதி (கேது)
இக்கோவில் தென்திருப்பேரையிலிருந்து 6வது கிமீ ல் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் அழகிய பொன்னம்மை நடைதிறப்பு காலை 7.00 – 10.30 மாலை 5.00 – 8.30
சேந்தபுமங்கலம் (சுக்கிரன்)
இக்கோவில் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் புன்னக்காயல் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் சௌந்தர்யநாயகி நடைதிறப்பு காலை 7.00 – 10.30 மாலை 5.00 – 8.30

நவதிருப்பதி

தூத்துக்குடி மாவட்டத்தில் 9விஷ்ணு கோவில்களிலும் அருகாமையில் அமைந்துள்ளனர். இக்கோவிலில் வழிபடுவதின் மூலம் நவக்கிரங்களால் எற்படுகின்ற தீமையினின்று விடுதலைக் கிடைக்கும் இக்கோவில் பண்டைக்கால கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில்களில் கீழ்கண்டபடி தரிசனம் மேற்கொள்ளலாம் .

நவதிருத்தலங்கள் அனைத்தும் திருச்செந்தூர் – திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ளன. 9 திருத்தலங்களின் ஆழ்வார் திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகியவை திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி சாலையின் இடையில் அமைந்துள்ளது. இதர ஏழு திருத்தலங்களும் சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் முருக பெருமானை தரிசிக்க வரும் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் திருத்தலங்களை கண்டு தரிசிப்பார்கள். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் திங்களில் பத்து நாட்கள் தொடர்ச்சியாக திருவிழா கொண்டாடப்படுகிறது. நவதிருத்தலங்களை மக்கள் தரிசிப்பதற்கு ஏதுவாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் திங்களில் அனைத்து சனிக்கிழமைகளிலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையித்திலிருந்து நவதிருப்பதி தலங்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தால் சிறப்புப் பேருந்து இயக்கப்படுகிறது. முன்பதிவு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

பாஞ்சாலங்குறிச்சி

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

பாஞ்சாலங்குறிச்சி கிராமம் தூத்துக்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் திருநெல்வேலியிருந்து 55 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிறிய ஊராகும். இவ்வூரில் பிறந்த மக்களால் போற்றப்பட்ட வீரபாண்டியக்கட்டபொம்மன் கி.பி. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசை எதிர்த்து குரல் எழுப்பினார். வீரப்பாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவுச் சின்னம் 1974ல் தமிழக அரசால் கட்டப்பட்டது. நினைவுச்சின்னம் கட்டிடத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வீர தீரங்களையும் அவர்கால வரலாற்று சான்றுகளையும் வெளிப்படுத்தும் முகமாய் அமைந்துள்ளன. கோட்டைக்குள் ஸ்ரீதேவி சக்கம்மாள் கோவில் அமைந்துள்ளது. கோட்டையின் அருகே போரில் மரணம் அடைந்த ஆங்கிலேய போர் விரர்களை புதைக்கப்பட்ட இடம் உள்ளது. ஆங்கிலேயர்களால் அனுமதிக்கப்பட்ட பழைய கோட்டையின் எஞ்சியப் பகுதிகளை தொல்லியில் துறையினரால் பராமரிக்கப்பட்டது. இவ்விடத்திற்கு சென்று வர தூத்துக்குடியிலிருந்து நகர பேருந்து வசதிகள் உள்ளன.

திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் கோயில்

திருச்செந்தில் உள்ள அருள்மிகு முருகன் திருக்கோவில் தென் இந்தியாவில் உள்ள புனித தலங்களில் ஒன்றாகும் இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.இக்கோவில் தூத்துக்குடியிலிருந்து 40கி.மீ தொலைவில் அமைந்துள்ளது . கி.பி.17ம் நூற்றாண்டில் இத்திருத்தலத்தின் கோபுரம் 157 அடி உயரத்தில் 9 அடுக்குகளை கொண்டுள்ளது

இக்கோவிலில் வள்ளிகுகை மற்றும் நாலிக்கிணறு ஆகியவை புனித இடமாக கருதப்படுகிறது

இத்திருத்தலம் பேரூந்து (ம) புகை வண்டி வசதிகள் அமைய பெற்றதாகும்.